இந்தியாவில் ஆன்லைன் வாயிலாக பட்டப்படிப்பு படிக்கும் திட்டத்தை பல்கலைக்கழகம் மானிய குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 900 தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இணையதளம் மூலமாக படிப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கு பல்கலைக்கழகம் மானிய குழு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு தங்களுடைய உயர் கல்வியை ஆன்லைன் வாயிலாகவே படிக்கலாம். இந்நிலையில் நேரடியாக கல்லூரிக்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு சமமாக ஆன்லைனிலும் பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதனையடுத்து கிராமப்புறத்தில் வசிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு யுஜிசி ஆங்கில மற்றும் பிராந்திய மொழிகளில் டிஜிட்டல் சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புடன் சேர்ந்து டிஜிட்டல் பாடத்திற்கான புதிய போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய போர்டலை மாணவர்கள் தங்களுடைய செல்போன் அல்லது கம்ப்யூட்டர் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் பல்வேறு விதமான பாடத்திட்டங்களை தேர்வு செய்து படித்துக் கொள்ளலாம். மேலும் PG பட்டப்படிப்பில் தற்போது 23 ஆயிரம் பாடத்திட்டங்கள் மற்றும் 136 செல்ஃப் படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் சேவை படிப்புகளை கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் 2.5 லட்சம் பொது சேவை மையங்கள், 5 லட்சத்திற்கும் அதிகமான சிறப்பு நோக்க வாகன மையங்கள் போன்றவற்றின் மூலம் மாணவர்கள் எளிதில் பெற்றுக் கொள்ளலாம். இந்த டிஜிட்டல் போர்டலில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுவதோடு, ஆய்வுகளையும் இலவசமாக செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.