இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். தங்கள் கையிலிருக்கும் செல்போன் மூலமாக ஆன்லைன் ஷாப்பிங், நெட்பேங்கிங் போன்றவைகளை மேற்கொள்கின்றனர். தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் அதை தடுக்கும் விதமாக ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைனில் கார்டு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ஒப்புதல் பெறுவதற்கான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் செய்யும் போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அந்த வகையில் ஆப்பிள் நிறுவனமும் பண பரிவர்த்தனைகள் செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஆப்பிள் போனில் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது. அதற்கு பதிலாக நெட் பேங்கிங், ஆப்பிள் ஐடி பேலன்ஸ், UPI போன்றவைகளை பயன்படுத்தி மட்டுமே இணையதளத்தில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். மேலும் ஆட்டோ டெபிட் முறைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மற்றும் வங்கிகளின் ஒப்புதல் பெறப்படும்.