ஆன்லைன் மற்றும் தொலைதூர முறையில் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.இதனிடையே ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படும் பிஎச்டி படிப்புகள் செல்லாது என்று யுஜிசி திடீரென அறிவித்துள்ளது.கொரோனா காலத்திற்கு பின்னர் இந்தியாவில் ஆன்லைன் எனப்படும் இணைய வழி மூலம் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 170 சதவீதமும் தொலைதூரக் கல்வி முறையில் படிப்பவர்களின் எண்ணிக்கை 42 சதவீதமும் அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. நாடு முழுவதும் 66 உயர்நிலை நிறுவனங்களில் 136 இளங்கலை படிப்புகள் மற்றும் 236 முதுகலை படிப்புகள் ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படுகின்றன.
அதில் பிபிஏ படிப்பில் 13,764 பேரும், முதுநிலை எம்பிஏ படிப்பில் 28,956 பேரும் பயின்று வருகிறார்கள்.இந்நிலையில் தனியார் கல்வி மற்றும் பயிற்சி நிலையங்கள் வெளிநாட்டு கல்வி நிலையங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆன்லைன் மூலம் வழங்கும் பிஎச்டி படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.