Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலமாக விற்பனை…. கிளி வளர்ப்பது குற்றமா…? வனத்துறை அதிகாரியின் எச்சரிக்கை…!!!

வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1948-ன் படி அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் பச்சைக்கிளிகள் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்த கிளிகளை வளர்ப்பது, விற்பது இரண்டுமே குற்றமாகும். ஆனால் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ கிளிகளை விற்பனை செய்கின்றனர். சிலர் கிளிகளை பிடித்து இறகுகளை வெட்டி துன்புறுத்தி வீட்டில் வைத்து வளர்க்கின்றனர். இதனை அடுத்து இனப்பெருக்கம் செய்து ஒரு ஜோடி கிளி 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.

இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட வனச்சரகர் அருண்குமார் கூறியதாவது, கோவை மாவட்ட வன அலுவலகத்தில் செயல்படும் பறவை மறுவாழ்வு மையத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கிளிகள் பராமரிக்கப்படுகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட கிளிகள் வீட்டில் வளர்க்கப்பட்டதாகும். அவர்களிடம் விசாரித்தால் கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பது எங்களுக்கு தெரியாது என கூறுகின்றனர். இனிவரும் காலங்களில் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ கிளிகள் வாங்கி வளர்ப்பில் ஈடுபட்டால் 6 மாத ஜெயில் தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரி தெரிவித்தார்.

Categories

Tech |