Categories
திருவாரூர் மாநில செய்திகள்

ஆன்லைன் மூலம் இறுதி தேர்வு – திருவாரூர் மத்திய பல்கலை. அறிவிப்பு …!!

மத்திய பல்கலைக் கழக தேர்வு வாரியம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

ஜூன் 22ம் தேதி அன்று அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்திக்கொள்ள துறை தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்கள் முழுவதுமாக தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நீலக்கொடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் அனைத்து ஆண்டு தேர்வுகளும் ரத்து என தேர்வு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி ரகுபதி தெரிவித்திருந்தார்.

சென்ற ஜூன் மாதம் 22ம் தேதி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் தேர்வு இரத்து செய்யப்பட்டு விட்டதாக  அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது புதிய அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு  துறைவாரியாக தேர்வு என்பது ஆன்லைன் மூலமாக நடைபெறும் எனவும், தேர்வுகள் நடைபெறும் தேதி அந்தந்த துறை அதிகாரிகள் நேரடியாகவே  மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தெரிவிப்பார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு தேர்வு நடக்ககும்,நடக்காது என மாறுபட்ட கருத்துக்கள் வெளிவந்த நிலையில், தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும் என பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி ரகுபதி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |