Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் மூலம் உழவர் அடையாள அட்டை எப்படி பெறுவது?…. இதோ எளிய வழி….!!!!

ஆன்லைன் மூலம் உழவர் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் முறை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

தேவைப்படும் ஆவணங்கள்:
குடும்ப அட்டை எண்
வாக்காளர் அடையாள அட்டை எண்
ஆதார் கார்டு எண்
பான் கார்டு எண்
விவசாய கிரெடிட் கார்டு எண்
ஓட்டுநர் உரிமம் எண்
பாஸ்போர்ட் நம்பர்
வங்கி கணக்குப்புத்தகம்

விண்ணப்பிக்கும் முறை:

முதலில் https://kisan.gov.in/(S(31zybnuu1ccf514bpcuow5ai))/Login-Farmerap.aspx என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதி இருக்கும். முகப்பு பகுதியில் Farmer Registration என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும். அதை Open செய்தவுடன் அதில் New User என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

❖கிளிக் செய்தவுடன் Application Enrolment Form ஒன்று Open செய்யப்படும். அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்தில் முதலில் விண்ணப்பத்தாரரின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

❖அடுத்து அடையாள விபரங்கள் மற்றும் முகவரி விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு வங்கி விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். அடுத்தபடியாக பிற உழவர் விவரங்களை (Other Farmer Details) உள்ளீடு செய்ய வேண்டும்.

❖பிறகு உழவர் அட்டையை (Farmer Photo) உள்ளீடு செய்ய வேண்டும். கடைசியில் கடவுச்சொல்லை (Password) உள்ளீடு செய்ய வேண்டும்.

❖கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின்பு Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் இணைய முகவரி: https://kisan.gov.in/(S(31zybnuu1ccf514bpcuow5ai))/Login-Farmerap.aspx

பயன்கள்:
❖உழவர் அடையாள அட்டை வைத்திருபவர்களுக்கு விபத்து நிவாரண உதவித்தொகை, முதியோர் உதவி தொகை, இயற்க்கை மரணம் மற்றும் ஈமசடங்கு உதவித்தொகை, உறுபினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை ஆகிய நல உதவிகள் வழங்கப்படும்.

Categories

Tech |