Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைன் மூலம் கலப்பு திருமண சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

ஆன்லைன் மூலம் கலப்பு திருமண சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி இந்த தொடரில் நாம் தெரிந்து கொள்வோம்.

தேவைப்படும் ஆவணங்கள்:

புகைப்படம் (மணமகன் மற்றும் மணமகள் சேர்ந்து இருக்கும் புகைப்படம்)

விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை

குடிமக்கள் கணக்கு எண்

சாதி சான்றிதழ் (மணமகன் மற்றும் மணமகள்)

திருமண பதிவு சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை:

முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Option இருக்கும்.

Sign in பகுதியில் Franchisee Login மற்றும் Citizen Login என்று இரண்டு Option-கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் Citizen Login என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு அதில் கீழே கொடுக்கபட்டுள்ள New User Option-ஐ கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் விவராங்களை பூர்த்தி செய்ய வேண்டும். (குறிப்பு: ஸ்டார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்.

விபரங்கள் அனைத்தையும் நிரப்பிய பிறகு நீங்கள் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு OTP (One Time Password) எண் வரும், அதை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் பதிவு செய்த Login மற்றும் Password-ஐ கொடுத்து உள்நுழைய வேண்டும்.

Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் செய்து (Intercaste Marriage Certificate) என்ற Option-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வு செய்த பிறகு அங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு படித்து Proceed பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இவை அனைத்தையும் முடித்த பிறகு, Register CAN என்ற பட்டனை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தையும் சரியாக நிரப்ப வேண்டும்.

இப்போது நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு CAN Registration Number Message-ஆக வரும், அந்த எண்ணை CAN Register கட்டத்தில் கொடுத்து Proceed பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் உங்கள் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP வரும் அதை உள்ளீடு செய்து Proceed பட்டனை மீண்டும் கிளிக் செய்ய வேண்டும். (குறிப்பு: நீங்கள் கொடுத்த தகவல்களை மாற்ற விரும்பினால் Edit CAN Detail பட்டனை கிளிக் செய்து மாற்றி கொள்ளவும்)

அடுத்து நீங்கள் CAN Register பண்ணும் பொழுது நீங்கள் கொடுத்த அனைத்து விபரங்களும் வந்து விடும். அதில் Form Details காலத்தை மட்டும் நிரப்ப வேண்டும். நிரப்பிய விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறைக்கு பலமுறை சரிபார்த்த பின்னர் Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

CAN Register செய்த உடன் அதில் உங்களது மொபைல் நம்பர் கொடுத்து Search செய்து கொள்ள வேண்டும், பிறகு உங்களது CAN Register Details-ஐ சரிபார்த்து கொள்ள வேண்டும். பிறகு Intercaste Marriage Certificate Page Open ஆகும்.

அதில் மணமகன் மற்றும் மணமகள் இருவருடைய Community Certificate details Upload பண்ண வேண்டும், பிறகு Marriage Details Fill பண்ணுங்க, அடுத்து Declaration Option இருக்கும் அதை கிளிக் செய்த பின்பு Submit கொடுக்க வேண்டும்.

அதன் பின்னர் List of Documents பகுதியில் (Photo, Address Proof, Husband and Wife Community Certificate, Self Declaration by Applicant, Marriage Register Certificate) Mandatory Options காட்டப்படும். அதில் கொடுக்கப்பட்டுள்ள Image (50 KB) அல்லது PDF (200 KB) அளவை அறிந்து அதற்கேற்ப Upload செய்ய வேண்டும்.

அடுத்து Self Declaration Form-ஐ தரவிறக்கம் செய்து அதில் உங்களுடைய கையொப்பம் இட்ட பிறகு, அதனை Scan செய்து Upload செய்ய வேண்டும்.

அனைத்து சான்றிதழ்களையும் பதிவு செய்த பின்னர் Make Payment பட்டனை கிளிக் செய்து ரூ. 60 கட்டணம் செலுத்த வேண்டும்.

அடுத்து அரசாங்க அலுவலகத்தில் இருந்து உங்களுடைய விண்ணப்பம் சரிபார்த்த பின்பு தங்களின் தொலைபேசி எண்ணிற்கு தகவல் வந்து சேரும், அதன் பின் TNeGA Login செய்து திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ் கலப்பு திருமண சான்றிதழ் (Intercaste Marriage Certificate) தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் இணைய முகவரி:
https://www.tnesevai.tn.gov.in/

பயன்கள்:
அரசு உதவித்தொகை பெறுவதற்கு
அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடனுதவி பெறுவதற்காகவும்
மத்திய / மாநில பொது துறையில் பணியில் சேர்வதற்கும்.

Categories

Tech |