Categories
டெக்னாலஜி

ஆன்லைன் மூலம் புதிய ஸ்மார்ட் கார்ட் விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ… பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

ஆன்லைன் மூலம் குடும்ப அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

தேவைப்படும் ஆவணங்கள்:

குடும்ப தலைவரின் ஆதார் அட்டை

குடும்ப உறுபினர்களின் ஆதார் அட்டைகள்

குடும்ப தலைவரின் புகைப்படம்

வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி, பாஸ்போர்ட், வாடகை ஒப்பந்தம், குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை, தொலைபேசி கட்டண ரசீது இவைகளில் ஏதேனும் ஒன்று.

விண்ணப்பிக்கும் முறை:

குடும்ப அட்டை பெறுவதற்கு முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று இணைய முகப்பு பக்கத்தில் மேல் கடைசியில் சிவப்பு நிற வண்ணத்தில் மின்னணு அட்டை சேவைகள் என்ற கட்டம் இருக்கும். அதன்கீழ் உள்ள மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

பிறகு அதில் இரண்டு Options (புதிய மின்னணு அட்டைக்கான விண்ணப்பம், பழைய குடும்ப அட்டை பதிவு) இருக்கும். அதில் புதிய மின்னணு அட்டைக்கான விண்ணப்பம் என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது விண்ணப்பதாரர்கள் குடும்ப தலைவரின் பெயர், முகவரி போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிட வேண்டும்.

பிறகு குடும்பத் தலைவரின் புகைப்படத்தையும் நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில் (Image Size: 5.0 M.B) பதிவேற்றம் செய்ய வேண்டும். (குறிப்பு: ஸ்டார் குறியீடு கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்)

பிறகு குடும்ப உறுப்பினர் விவரங்களை உள்ளீடு பெய்தபின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டை தேர்வில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து, (வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி, பாஸ்போர்ட், வாடகை ஒப்பந்தம், குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை, தொலைபேசி கட்டண ரசீது) இலைகளில் ஏதேனும் ஒன்றை அதற்கேற்ற (Image or PDF Size 1.0 M.B) அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பினனர் எரிவாயு இணைப்பு விபரங்கள் மற்றும் அறிவிப்பை சேர்த்து படிவத்தை சமர்பிக்க வேண்டும்.

சமர்பித்த பிறகு, அவர்கள் பதிவுபெய்த தொலைபேசி எண்ணிற்கு குறிப்பு எண் வரும். இந்த குறிப்பு எண்ணை வைத்து மீண்டும் முகப்பு பகுதிக்கு சென்று மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலையையும் நீங்கள் சரிபார்க்கலாம்.

சமர்பிக்கபட்ட ஆவணங்கள் மற்றும் விவரங்களை அரசாங்க அலுவலர்கள் சரிபார்த்த பின்னர், உங்களுக்கு அறிவிப்பு வரும். அதன்பின் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று உங்களின் குடும்ப அட்டையை (Ration Card/ Smart Card) பெற்றுகொள்ளலாம்.

முக்கிய இலணயதள முகவரிகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பகுதிக்கு செல்ல:
https://www.tnpds.gov.in/

மின்னணு அட்டை சேவைகள் பகுதிக்கு செல்ல:
https://www.tnpds.gov.in/pages/registeracard/register-a-card-status.xhtml

மின்னணு அட்டை விண்ணப்பிக்க:
https://www.tnpds.gov.in/pages/registeracard/register-a-card.xhtml

கருத்து / புகார் செய்ய:
https://www.tnpds.gov.in/pages/complaint.xhtml

❖ மின்னணு அட்டை விபரத்தில் மாற்றம் செய்ய:
https://www.tnpds.gov.in/pages/servicerequest/smartcardcrstatus.xhtml

Categories

Tech |