இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக ரயிலில் மட்டுமே பயணிக்க முடியும். இதில் அனைத்து வசதிகளும் உள்ளன. தற்போது ரயில் டிக்கெட் பெறுவதற்கு ரயில் நிலையம் வர வேண்டிய அவசியமே கிடையாது. வீட்டில் இருந்து கொண்டே இறுதியில் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் ரயில் டிக்கெட் ஒரு மாதத்திற்கு முன்பு கூட புக்கிங் செய்யும் வசதியும் உள்ளது. இந்நிலையில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இடையில் போர்டிங் பாயிண்ட்டை மாற்ற நினைத்தால் அவற்றை எளிதில் மாற்றி விடலாம். அதற்கான வசதியை தற்போது ரயில்வே துறை வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் போர்டிங் பாயிண்ட் மாற்றும் போது உங்களுக்கு எந்தவித கட்டணமும் அபராதமும் வசூல் செய்யப்படாது.
சில அவசர காரணங்களுக்காக பயணிகள் போர்டிங் பாயிண்ட்டை மாற்ற முயற்சி செய்வார்கள். அதனை கருத்தில் கொண்டு ஐ ஆர் சி டி சி இந்த வசதியை பயணிகளுக்கு வழங்கியுள்ளது. இதை மாற்ற விரும்பும் பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக அதனை செய்ய வேண்டும். மேலும் ஆன்லைன் மூலம் புக் செய்வதற்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்படும் எனவும் ஒருமுறை மட்டுமே போர்டிங் பாயிண்ட் மாற்ற வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.