Categories
பல்சுவை

ஆன்லைன் மூலம் விதவை பென்ஷன் தொகை பெறுவது எப்படி?…. இதோ எளிய வழி….!!!!

விதவைகளுக்கான பென்ஷன் ஆன்லைன் மூலமாக எப்படி அப்ளை செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். விதவை பென்ஷன் வாங்குவதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள், தேவையான ஆவணங்கள் என்னென்ன?.. தமிழகத்தில் ஏராளமான பென்ஷன் திட்டங்கள் உள்ளது. அதில் விதவைப் பெண்களுக்காக தற்போது பென்ஷன் ஆன்லைன் மூலம் எளிமையாக எப்படி அப்ளை செய்து பெறலாம் என்பதை பார்க்கலாம்.

இதற்கு தகுதியானவர்கள்:

ஆதரவற்றோராக இருக்க வேண்டும்.
கணவரால் கைவிடப்பட்ட விதவையாக இருக்க வேண்டும்.
20 வயதிற்கு மேல் உள்ள ஆண் மகன்கள் அவர்களுக்கு இருத்தல் கூடாது.
அவர்களுக்கு சொந்த வீடு, நிலம் எதுவும் இருக்கக்கூடாது.

தேவையான ஆவணங்கள்:

விண்ணப்பதாரரின் புகைப்படம்
குடும்ப அட்டை
ஆதார் அட்டை
இறப்பு சான்றிதழ்
விதவைக்கான சான்றிதழ்
பேங்க் பாஸ்புக்

உங்களின் விண்ணப்பம் VAO, RI, தாசில்தார் ஆகியோருக்கு சென்ற விண்ணப்பங்களை பூர்த்தி செய்த பிறகு அவர்கள் approved செய்வார்கள். உங்களுக்கு தேவையான ஆர்டர் காப்பியை ஆன்லைன் மூலமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.அதற்கு அடுத்த மாதத்திலிருந்து உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு விதவை பென்ஷன் தொகை 1,000 ரூபாய் வந்து சேரும்.

ஆன்லைன் மூலமாக விதவை உதவித்தொகை அப்ளை செய்வது எப்படி?

இதற்கு முதலில் tnega என்று டைப் செய்ய வேண்டும். அவற்றில் ‘citizen login’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

புதிதாக Account திறக்கவும். அதில் new user? Sign up என்ற ஆப்ஷனில் புதிதாக அக்கவுண்ட் ஓபன் செய்யலாம். ஏற்கனவே அக்கவுண்ட் இருந்தால் user name, password கொடுத்து லாகின் செய்யவும்.

அடுத்து captcha code என்பதில் சரியானவற்றை கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.

அவற்றில் revenue department என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் நிறைய திட்டங்கள் இருக்கும். நீங்கள் destitute widow pension scheme என்பதை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து proceed என்பதை கிளிக் செய்து, register can என்பதை கிளிக் செய்ய வேண்டும்

அதில் document type என்பதில் திரு/திருமதி என்பதில் சரியானவற்றை கொடுத்து விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, உறவு முறை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பிறகு மொபைல் நம்பர் கொடுத்து generate OTP என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு ஓடிபி எண் வரும்.

அதனை கொடுத்து ரிஜிஸ்டர் என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது can நம்பர், ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து விவரங்களை குறிப்பிட்ட பிறகு search என்பதை கிளிக் செய்யவும்.

தற்போது திரையில் உங்களுடைய அனைத்து விவரங்களும் தோன்றும். அவற்றை கிளிக் செய்யவேண்டும்.

இப்போது படிவம் ஓபன் ஆகும். அடுத்து mode of disbursement என்பதில் bank, postal மூலம் தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு வங்கி விவரங்கள் என்பதில் சரியானவற்றை பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு அடுத்தடுத்த கேட்கும் விவரங்கள் அனைத்தையும் சரியாக பதிவிட வேண்டும்.

அடுத்து உங்களுடைய ஆவணங்களை அப்லோட் செய்யவும். உங்களுடைய புகைப்படம், மீதமுள்ள அனைத்து ஆவணங்களும் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். ஸ்கேன் செய்து வைத்துள்ளதை படிவத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.

அடுத்ததாக self declaration form, download aadhar consent form என்பதை டவுன்லோட் செய்வதற்கு download self declaration form என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு ஒரு படிவம் தோன்றும். அதனை டவுன்லோட் செய்து அதில் உங்களுடைய கையெழுத்து போட வேண்டும்.

பிறகு aadhar consent form பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும். இல்லையென்றால் இ-சேவை மையம் மூலம் பயன்படுத்தி கையெழுத்து இடவும்.

இந்தப் படிவத்தை அப்லோட் செய்ய வேண்டும். பிறகு சர்வீஸ் சார்ஜ் 10 ரூபாய் இருக்கும். அதனை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தலாம்.

பிறகு பணம் செலுத்தியவுடன் ஒப்புகைச் சீட்டு வரும். அவற்றில் உங்களுக்கான எண் இருக்கும். இந்த எண்ணை கொடுத்து உங்களுடைய ஸ்டேட்டஸ் நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

இதையடுத்து உங்கள் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கிய உடன் அடுத்த மாதத்திலிருந்து உங்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை உங்களது வங்கி கணக்கில் வந்து சேரும்.

Categories

Tech |