லாட்டரி விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் கேரளா உட்பட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் சர்ச் ரோடு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முகமது அசாருதீன்(23) என்பது தெரியவந்தது. அசாருதீன் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் முகமது அசாருதீனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 2 செல்போன்கள், 13000 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.