கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கற்காடு சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளங்கோ மற்றும் அபிலாஷ் என்பது தெரியவந்தது.
இருவரும் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்துள்ளனர். இருவர் மீதும் காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இளங்கோ மற்றும் அபிலாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 7500 ரூபாய் பணம், 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.