திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையதளத்தில் காய்கறி விற்பனை செய்வது தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். இதனால் மனோகரன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு காய்கறி வியாபாரம் செய்வதற்காக 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி ஏமார்ந்துவிட்டார்.
இதேபோல் மல்லக்குளம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் போலியான விளம்பரத்தை நம்பி ஆன்லைனில் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்து ஏமார்ந்துவிட்டார். இதுகுறித்த புகார்களின் பேரில் வழக்குபதிவு செய்த மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து மனோகரன் மற்றும் குமார் இழந்த பணத்தை மீட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர்.