இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது.இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் சுலபமாக முடித்து விடலாம்.அந்த அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் இருந்து கொண்டே இருக்கிறது.இருந்தாலும் தொழில்நுட்ப அம்சங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப அதனை தவறாக பயன்படுத்தும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக ஆன்லைன் பண மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால் பொதுமக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு அந்த அளவிற்கு கிடையாது. வங்கிகள் தரப்பிலும் அரசு தரப்பிலும் பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வந்தாலும் புதிய புதிய உத்திகளை பயன்படுத்தி தினம் தோறும் மோசடி செய்து பணத்தை கொள்ளை அடிக்கும் கும்பல்களின் கைவரிசை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.திடீரென செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி அதன் மூலம் நம்முடைய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஓடிபி போன்ற விவரங்களை கொடுத்து விட்டால் உடனே வங்கியில் உள்ள அனைத்து பணமும் காலிதான்.
இப்படி ஆன்லைன் பண மோசடியில் சிக்கினால் உடனடியாக 1930 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும் . அதேசமயம் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் சைபர் கிரைம் தொடர்பான மத்திய அரசு இணையதளத்திலும் cybercrime.gov.in என்பதிலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.