Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதற்கு விரைவில் தடை?…. மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்…!!!!

5 வருட சட்டப்படிப்புகளுக்கான முதல்சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆணையினை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள அமைச்சர் அறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முதல் 12 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குரிய சேர்க்கை ஆணையை அமைச்சர் ரகுபதி வழங்கினார். தமிழகத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 1,731 இடங்கள் உள்ளது.

இந்நிலையில் முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சுமார்1,300 இடங்கள் நிரம்பியுள்ளது. மீதமுள்ள இடங்கள் 2-ஆம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும். அதன்பின் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஆன்லைன் ரம்மிக்கான அவசரசட்டம் விரைவில் கொண்டுவரப்படும். அந்த சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்துசெய்யப்படாத அடிப்படையில் வலுவானதாக கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

அத்துடன் நீட்தேர்வு சட்ட மசோதா பற்றி ஆளுநர் கேட்கப்பட்ட விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறையால் வழங்கப்பட்டுள்ளது. நீட் மசோதாவுக்கு நல்ல முடிவுவரும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து இதுவரையிலும் எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

Categories

Tech |