தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “ஆன்லைன் ரம்மி விளையாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதனால் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்வதற்கு அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும். மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏழு பேரில் விடுதலைக்காக குரல் கொடுத்து உண்மையான அக்கறையுடன் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம்.
ஆனால் 7 பேர் விடுதலையில் திமுகவுக்கு அக்கறை இல்லை. அவர்களை விடுதலை செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக அரசுதான். 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். மேலும் 144 தடை உத்தரவை இருப்பதால் வேல் யாத்திரை சட்டப்படி அனுமதிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.