வங்கி ஊழியர்ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் இவர் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் பணி புரிந்து வந்தார். இவரும் இவரது நண்பர்களும் சென்னை பெரம்பூர் சீனிவாசா நகரில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கி வந்துள்ளனர்.
தற்போது ஆயுத பூஜையை ஒட்டி தொடர்ந்து விடுமுறை நாட்கள் வந்ததால் உடன் தங்கி இருந்த நண்பர்கள் எல்லோரும் ஊருக்கு சென்று விட்ட நிலையில் குமரேசன் மட்டும் அறையில் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை ஊருக்கு சென்ற நண்பர்கள் சென்னை திரும்பி வந்துள்ளனர்.
அப்பொழுது அறைக்கு வந்த அவரது நண்பர்கள் அறையில் குமரேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து செம்பியன் போலீஸார் தகவல் அறிந்து வந்து குமரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைதனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரனணயில் அதில் தற்கொலை செய்துகொண்ட குமரேசன் ஓய்வு எடுக்கும் நேரத்தில் செல்போனில் ஆன்லைன் மூலமாக ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதற்காக தனது தம்பி மற்றும் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கடன் வாங்கி சூதாடியதுடன் தனது சம்பளப் பணத்தையும் வீட்டிற்கு கொடுக்காமல் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான குமரேசன் தனியாக இருந்த பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் அவர் எவ்வளவு பணம் இழந்தார் என்பது விசாரணைக்குப் பிறகு தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.