Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்….. தீவிரம் காட்டும் முதல்வர்….. பிண்ணனியில் இறையன்பு….!!!!!

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் இணையதளங்களை பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடும் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து விடுகின்றனர். இதில் குறிப்பாக ஆன்லைன் ரம்மியால் பலர் தங்களுடைய பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில் பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது ஆன்லைன் ரம்மியை தடை செய்து அவசர சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை தடை செய்யக்கோரி சில நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான போதுமான அளவு அறிவியல் காரணங்கள் இல்லாததால் தடையை ரத்து செய்வதாக கூறி தீர்ப்பு வழங்கினார்.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் பண இழப்புகள் மற்றும் தற்கொலைகள் பற்றி நீதிமன்றத்திற்கு உரிய முறையில் எடுத்துரைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றினை அமைத்தார். இந்த குழு தங்களுடைய அறிக்கைகளை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளனர். இதனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசர சட்டம் இயற்றப்பட போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக சட்டமன்ற கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தற்போது முதல்வர் தீவிரம் காட்டி வருவதற்கு தலைமைச் செயலாளர் இறையன்பு தான் என்று தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். அதாவது ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட நிதி இழப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு இறையன்பு நேரடியாக எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அதோடு ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தீமைகள் பற்றியும் முதல்வரிடம் இறையன்பு எடுத்துக் கூறியுள்ளார். அதன் பின் ஆன்லைன் ரம்மியை தமிழக முதல்வர் நிரந்தரமாக தடை செய்தால் அவரின் இமேஜ் உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் ‌ முதல்வர் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதில் தற்போது தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் பிறகு ஆன்லைன் ரம்மியை தமிழக அரசு தடை செய்தாலும் அதை நிரந்தரமாக தடை செய்வதற்கான உரிமை மத்திய அரசிடம் இருக்கிறது.‌ அதன் பின் ஆன்லைன் ரம்மியால் அரசாங்கத்தினால் வேலை பார்க்கும் சில அதிகாரிகளும் பயனடைந்துள்ளதாக தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது. மேலும் ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்யும்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தடையை விலக்கிக் கொள்ளாத அளவுக்கு சட்டத்தை இயற்ற வேண்டும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |