Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த கணவர்…. விரக்தியில் பெண்ணின் விபரீத முடிவு…. சோகம்….!!!!

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் வசித்து வரும் ஞான செல்வன்(32) நாகல்கேணியிலுள்ள லெதர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வகிதா ப்ளோரா (30). இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஞான செல்வன் ஆன்லைனில் ரம்மி விளையாடியதால் ரூபாய்.1000-ஐ இழந்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன்- மனைவி இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வகிதா ப்ளோரா தன் தாய் வீட்டிற்க்கு செல்வதாக கூறி விட்டு, கணவர் இருந்த அறையை தாழ்ப்பாள் போட்டுள்ளார். இதையடுத்து வகிதா ப்ளோரா மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஞான செல்வன் கூச்சலிட்டதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது வகிதா ப்ளோரா தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சங்கர்நகர் காவல்துறையினர் வகிதா ப்ளோரா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். இவ்வாறு ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |