கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதனால் மாணவர்கள் கல்வி பாதித்து விடக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்த திட்டமிட்டு அட்டவணைப் படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்பதால் சில சாதக, பாதகமான அம்சங்கள் ஏற்படுகின்றன. ஆன்லைன் கல்வி மூலமாக ஹேக்கர்கள் மாணவர்களுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். டேப்லெட், லேப்டாப், செல்போன் ஆகியவற்றில் பயன்படுத்தி வீட்டில் இருந்து மாணவர்கள் கல்வி கற்கும் போதும், வகுப்புகளை கவனிக்கும் போது பாதுகாப்பாக பார்ப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்ற.
ஆன்லைன் கல்விக்காக பள்ளிகளில் உருவாக்கப்பட்ட சர்வர், செயலிகள் ஹேக் செய்யப்படுகிறது. சில மாணவர்கள் இணைய அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள். ஆன்லைன் வகுப்புகளில் ஹேக்கர்கள் மூலமாக ஆபாச வீடியோக்கள், திகில் படங்கள், தேவையில்லாத கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இது குறித்த பல்வேறு புகார்கள்… பல மாநில காவல்துறையினரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் ? எப்படி இதனை தடுக்க வேண்டும் ? என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் சில பரிந்துரைகளை வழங்கி உள்ளனர்.
பாதுகாப்பான ஆன்லைன் வகுப்புகளுக்கு:
ஆன்லைன் வகுப்புகளுக்காக பள்ளிகள் உருவாக்கியுள்ள சர்வர் அல்லது செயலிகள் சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் ஆபாச வீடியோக்கள், திகில் வீடியோக்களை ஒளிபரப்புவதால் மாணவர்கள் திசைமாறிச் செல்லும் வாய்ப்பு உள்ளது. பல பள்ளிகளில் ஆன்லைன் பாடம் நடத்துவதால் இது மிகவும் சாதாரண சம்பவமாக மாறி உள்ளது.
இதனை தடுக்க பள்ளிகள் செய்ய வேண்டியவை:
ஆன்லைன் குறித்து நல்ல அனுபவம் உள்ள ஒருவரை பணியமர்த்த வேண்டும். ஆன்லைனில் பாடம் நடத்த பயன்படுத்தப்படும் செயலியை வேறு எந்த காரணங்களும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். சரியான சாப்ட்வேர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தங்கள் பள்ளியின் சர்வர்களை பாதுகாக்கவேண்டும். பள்ளியின் செயலி, சர்வர் ஆகியவற்றை மாணவர்களின் பெற்றோருக்கு சோதனை செய்யவேண்டும்.
பள்ளிகள் செய்யக் கூடாதது:
பாதுகாப்பற்ற எந்த லிங்க்களையும் பதிவிறக்கம் செய்யக்கூடாது. ஆன்லைன் வகுப்புகளில் அன்னியர்கள் நுழையாமல் கண்காணிக்க வேண்டும். குறிப்புகள் எடுக்க பாதுகாப்பற்ற வலைதளங்களை பயன்படுத்த கூடாது.
சைபர் தாக்குதலை தடுக்க வல்லுநர்கள் பரிந்துரை:
எந்த ஒரு லிங்கையும் சரிபார்க்காமல் கிளிக் செய்யக்கூடாது. பாதுகாப்பான இணைய பயன்பாடு பற்றி மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.