தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்று முதல் நான்கு நாட்கள் தீபாவளி விடுமுறை அளிக்கப்படுகிறது. தீபாவளி விடுமுறையின் போது நான்கு நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது” என்று தெரிவித்துள்ளது.