Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

ஆன்லைன் மூலமாக தமிழ் கற்பிக்க விரும்புவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ் இணைய கல்வி கழகம் தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாக விளங்குகிறது. இணையத்தின் மூலம் உலகமெங்கும் உள்ளவர்களுக்கு தமிழ் கற்பித்தல் இதன் முதன்மையான நோக்கமாகும். தமிழ் இலக்கியம், கலை கலாச்சாரம் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இதன் வாயிலாக கலாச்சாரம் தொடர்பான விவரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாடு மற்றும் உள்நாடு களில் வாழும் மாணவர்களுக்கு இணைய வழியிலும், நேரடியாகவும் கற்பிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆங்கில மொழியிலும், பிற மொழி வாயிலாகவும் தமிழ் மொழியை கற்பிக்கும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும். இந்த பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஆசிரியர்கள், தகுதியான இளைஞர்கள் தங்களுடைய விவரங்களை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளத்தில் (www.tamilvu.org/eteach_reg/) உள்ள படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஜனவரி 10-ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளபடுகிறது. கற்பிக்கும் வகுப்புக்களின் அளவிற்கு ஏற்ப மதிப்பு ஊதியம் நிர்ணயம் செய்யப்படும் .

Categories

Tech |