டாடா நிறுவனம் ஆன்லைனில் தனது தயரிப்புகளை விற்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனமாக டாடா குழுமம் திகழ்கிறது. இந்த டாட்டா குழுமம் உப்பு முதல் கார் வரை தயாரித்து வருகிறது. தற்போது தனது அனைத்து தயாரிப்புகளையும் ஒரே செயலியின் மூலம் விற்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பிக்பாஸ்கட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கவும், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒன் மில்லி கிராம் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.