Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு….?? 3 1/2 கோடி ரூபாய் மோசடி செய்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் வினோத், காமராஜ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களிடம் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்திபட்டினத்தை சேர்ந்த வெங்கடாச்சலம், அவரது நண்பர்களான சங்கர் பாபு, கிருஷ்ணபிரகாஷ் ஆகியோர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி வினோத், காமராஜ் ஆகியோர் ரூ.3 ½ கோடி வரை கொடுத்துள்ளனர்.

அந்த  பணத்தை பெற்று கொண்ட வெங்கடாசமும் அவரது நண்பர்களும் எந்த வித லாபத்தொகையும் கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது அசல் தொகையும் கொடுக்காமல் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக வினோத் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |