திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையைச் சேர்ந்த வினோத், காமராஜ் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடம் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தி பட்டினத்தை சேர்ந்த வெங்கடாசலம் மற்றும் அவரது நண்பர்கள் கிருஷ்ண பிரகாஷ், சங்கர் பாபு ஆகியோர் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக வருவாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய வினோத், காமராஜ் அவர்களிடம் ரூ.3 1/2 கோடி வரை கொடுத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் எந்தவிதமான லாபத் தொகை மட்டுமல்லாமல் அசல் தொகையும் கொடுக்காமல் தப்பி ஓடி உள்ளனர். இதனால் மணப்பாறை காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.