பொழுதுபோக்குகாக ஆரம்பித்த ஆன்லைன் விளையாட்டுகள் நாளடைவில் பணத்தை சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மத்தியில் வளர்த்துவிட்டது. இந்த விளையாட்டால் நாடு முழுவதும் பல பேர் அதிக அளவிலான பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் மத்திய-மாநில அரசுகளானது இப்பிரச்சனையில் தலையிட்டு இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதித்திருக்கிறது.
அத்துடன் இதுகுறித்த விளம்பரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் கூகுள் மற்றும் யூடியூப் இவற்றில் மட்டும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் விளம்பரங்கள் வருவது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இவற்றை நிறுத்தவேண்டும் என மத்திய அரசு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.