Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு மூலம் பண மோசடி… சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்… 68 கோடி வங்கி வைப்புத் தொகை முடக்கம்…!!!!!

ஆன்லைன் கைபேசி விளையாட்டு மூலமாக குழந்தைகள் உள்ளிட்ட பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்த நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய அலுவலகங்களில் தீவிர சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 68 கோடிக்கும் மேலான வங்கி வைப்பு தொகையை முடக்கியிருக்கின்றனர். இது பற்றி அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணையின் கீழ் கோடா பண வர்த்தனை இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. கரெனா பிரீ பையர், டீன் பட்டி கோல்ட் போன்ற கைபேசி விளையாட்டுகள் மூலமாக பண மோசடியில் ஈடுபட்டதாக இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த விளையாட்டில் பங்கேற்பவர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்ள பணம் செலுத்தி எண்ம டோக்கன்களை வாங்கிக் கொள்ளலாம் எனும் அடிப்படையில் விளையாடுபவர்கள் இடமிருந்து இந்த நிறுவனம் பணத்தை வசூல் செய்திருக்கிறது. மேலும் இந்த நிறுவனம் வடிவமைத்திருக்கின்ற பணம் செலுத்தும் நடைமுறை மூலமாக விளையாட்டில் பங்கேற்பவர் ஒருமுறை வெற்றிகரமாக பணத்தை செலுத்திய பின்னர் அவர்களுக்கு ஒரு பாப் அப் அறிவிப்பு இணைய தொடர்பு ஒன்றை அந்த நிறுவனம் அனுப்புகின்றது. இது விளையாடுபவர்கள் அடுத்தடுத்து செலுத்த வேண்டிய பணத்தை அவர்களின் அனுமதி இல்லாமல் கோடா நிறுவனம் தானாக அவர்களின் வங்கி கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள வசதி செய்வதாகும். இவ்வாறு எண்ம செயல்பாடுகளை விற்பனை எனும் பெயரில் மோசடியாக வசூல் செய்யும் பணத்தை சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்திற்கு கோடா நிறுவனம் அனுப்பி விடுகிறது.

இதனை தொடர்ந்து விளையாட்டுகள் மூலமாக இதுவரை கோடா நிறுவனம் 2,850 கோடி வசூல் செய்து அதில் வரி செலவுகள் பெயரளவு லாபத்தொகை போன்றவற்றை பிடித்துக் கொண்டு மீறி 2265 கோடியே சிங்கப்பூரில் உள்ள தாய் நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த நிறுவனம் பண வசூலுக்காக குறிப்பிடும் எண்ம செயல்பாடுகள் விற்பனையின் மூலமாக கட்டுப்பாடும் சிங்கப்பூரில் உள்ள தாய் நிறுவனத்திடமே இருக்கிறது. மேலும் இந்தியாவில் உள்ள சிபிஐபிஎல் நிறுவனத்திடம் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் விவரங்களை முழுமையாக புரிந்து கொள்ளாத வாடிக்கையாளர்களிடமிருந்து அங்கீகரிக்கப்படாத வகையில் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பணத்தை எடுத்து குற்றத்தின் பெயரில் சிபிஐபிஎல் நிறுவனத்தின் அனைத்து வங்கி கணக்குகளுக்கும் பரிவர்த்தனைக்காக வணிக தனி அடையாள எண் மற்றும் வங்கி நிரந்தர வைப்பில் அந்த நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 68.53 கோடி போன்றவை பண மோசடி தடுப்பு திட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

Categories

Tech |