Categories
Tech டெக்னாலஜி

ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களா நீங்கள்?…. அப்போ இதை உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருள் ஒன்று எனில், அதை டெலிவரி செய்வது வேறொரு பொருளாக உள்ளது. இதுபோன்று ஏதொ ஓரிரு இடத்தில் நடந்து இருந்தால் தவறு என புரிந்துக்கொள்ளலாம். ஆனால் நூற்றுக்கணக்கானோரிடம் இதுபோன்ற மோசடி அரங்கேறி இருக்கிறது. இவற்றிற்கு பின்னால் மோசடி கும்பலின் தந்திரம் உள்ளது. அதுகுறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும் வேளையில் தயாரிப்பைத் தேர்ந்தெடுத்த பின், நேரடியாகப் பணம் செலுத்தி டெலிவரி செய்யப்படும் வரை காத்திருக்கின்றனர்.

இவ்வாறு ஷாப்பிங் செய்வது உங்களது தயாரிப்பைப் பாதுகாப்பற்றதாக ஆக்குகிறது. இதனால் நீங்கள் எப்போதும் ஓபன்பாக்ஸ் டெலிவரி ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் பொருட்களை டெலிவரி பாய் உங்களுக்கு திறந்து காட்டுவதற்கு அனுமதி இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் ஓபன்பாக்ஸ் டெலிவரி ஆப்சனை தேர்ந்தெடுக்கவில்லை எனில் ஷாப்பிங் எக்ஸிகியூட்டிவ் அந்த பாக்ஸை ஓபன் செய்ய இயலாது. ஓபன்பாக்ஸ் டெலிவரி ஆப்சனில் நீங்கள் பொருளை டெலிவரி எக்ஸிகியூடிவ் திறந்துகாட்டி சமாதானம் அடைந்தால் மட்டுமே பெற்றுக் கொள்ளலாம்.

இல்லையெனில் திருப்பி அனுப்பி விடலாம். உள்ளூர் விற்பனையாளரின் உதவியுடன் நிறுவனமானது தயாரிப்புகளை டெலிவரி செய்யும் போது, ​​அதிகபட்ச மோசடி இருக்கிறது. ஓபன்பாக்ஸ் டெலிவரி இல்லாத ஆர்டர்கள் இல்லையெனில், டெலிவரி செய்பவர்கள் அசல்பொருளை மாற்றி வேறொரு பொருளை வைத்து உங்களுக்கு போலியான பொருட்களை வழங்குகின்றனர். இதன் காரணமாக வாடிக்கையாளர்களாகிய நீங்கள் சிரமத்துக்குள்ளாக வேண்டி இருக்கும். எனவே எப்போது ஆர்டர் செய்தாலும் ஓபன்பாக்ஸ் டெலிவரி ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்..

Categories

Tech |