இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் இணையதளத்திலேயே தங்களுடைய ஷாப்பிங்கை முடித்து விடுகின்றனர். விலை மலிவான பொருள் முதல் விலை உயர்ந்த பொருட்கள் வரை ஆன்லைன் செயலியில் தான் பெரும்பாலான மக்கள் வாங்குகின்றனர். இந்த ஆன்லைன் சேவைகளில் அமேசான் மற்றும் flipkart செயலிகளை தான் பொதுமக்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். இந்த 2 செயலிகளில்தான் மலிவான விலையில் பொருட்கள் கிடைக்கிறது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அமேசான் மற்றும் பிலிப்கார்ட்டை விட meesho மற்றும் சாப்ஷி செயலிகளில் மலிவான விலைக்கு பொருள்கள் கிடைக்கிறது. இந்த செயலிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பொருட்களை நேரடியாக பெற்று அதை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. மேலும் ஷாப்சி மற்றும் மீசோ செயலிகளை நீங்கள் பார்த்தால் அதில் கண்டிப்பாக விலை குறைவாக இருக்கும்.