மிகவும் ஆபத்தான நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க கூடிய வழிமுறைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஒரு சில நபர்கள் மட்டுமே உயிரிழக்கின்றனர். அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்பாடுகளில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அது பற்றி அமெரிக்காவின் யேல் நிபு ஹெவன் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் முதல் இறந்தவர்கள் வரை ஆராய்ந்தார்கள். அத்தகைய ஆராய்ச்சியில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு காலப்போக்கில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்பாடுகளில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுவதையும் கூறியுள்ளனர். இது குறித்து யேல் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மூத்த விஞ்ஞானி அகிகோ இவாசாகி கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், தங்களின் உடலில் இருக்கின்ற வைரஸ் துகள்களின் அளவிலோ அல்லது நோய் எதிர்ப்பு மண்டலம் எதிர்வினையும் எத்தகைய குறைவும் அறியவில்லை.
சைட்டோகைன் எனப்படும் மூலக்கூறுகள் உட்பட்ட பல்வேறு நோய் எதிர்ப்பு சமிக்ஞைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் தொடக்கத்தில் கொரோனா சிகிச்சையில் எந்த நோயாளிகள் நோயின் மிக கடுமையான வடிவங்களை உருவாக்கும் ஆபத்தின் இருக்கின்றார்கள் என்பதனை கணிக்கக் கூடிய காரணிகளை கண்டறிந்துள்ளோம். அப்படிப்பட்ட நோயாளிகளுக்கு முன்கூட்டியே ஏற்ற சிகிச்சையை அளிப்பதற்கு உதவியாக இருக்கும்” என கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து மூத்த விஞ்ஞானி அகிகோ இவாசாகி கூறுகையில், “இத்தகைய ஆராய்ச்சியால் நோய் ஆபத்து சூழலை எங்களால் எளிமையாக வெளியேற்ற முடிந்தது” என கூறியுள்ளார்.
அதே சமயத்தில் நோய் தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் சிறப்பாக பதிலளிக்கக் கூடிய நபர்கள், அதிக அளவு வளர்ச்சி காரணிகளை வெளிப்படுத்துவதையும், ரத்த நாளங்கள் மற்றும் நுரையீரல் திசுக்களை சரி செய்ய கூடிய நோய் எதிர்ப்பு மண்டலம் மூலக்கூறுகளை வெளிப்படுத்துவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் மோசமான நிலைக்கு ஆளாக கூடிய நோயாளிகளை முன்னரே கணிப்பதற்கு இத்தகைய ஆய்வுத் தரவுகள் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆய்வில் கண்டறியப்பட்ட அழற்சியின் காரணங்களை குறிப்பாக குறிவைக்கும் மருந்துகள், கொரோனா வைரஸ் தொற்றின் கடுமையான நிகழ்வுகளை உருவாக்கும் ஆபத்தில் இருக்கின்ற நோயாளிகள் அனைவருக்கும் எளிதில் சிகிச்சை அளிக்க உதவும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.