Categories
தேசிய செய்திகள்

ஆபத்தான கொரோனா பாசிடிவ் விகிதம்…. மக்களே… நீங்க செய்ய வேண்டியது இதுதான்… கவனம்…!!!

பல மாநிலங்களில் பாசிட்டிவ் விகிதம் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் தற்போது தான் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளன. ஆனால் கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த பாதிப்பு விகிதம் சற்று அதிகரித்து உள்ளது. இதனால் விரைவில் மூன்றாம் அலை வரலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அடுத்த மூன்று மாதங்களுக்கு பண்டிகை காலம் என்பதால் மேலும் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 16 வாரங்களில் நாட்டின் ஒட்டுமொத்த வாராந்திர கொரோனா தொற்று சதவிகிதம் 3 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

இது நம்பிக்கையூட்டும் விதமாக இருந்தாலும் 64 மாவட்டங்களில் 5 சதவீதத்துக்கும் மேல் பாசிட்டிவ் விகிதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், பண்டிகைகளை வீட்டிலிருந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ள கருத்துக்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அதாவது, மாநில அளவில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மக்கள் கூட்ட நெரிசலிலும், தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருந்தால் தொற்று வேகமாக பரவுவதற்கு காரணமாக அமைந்துவிடும். முடிந்தவரை மக்கள் தடுப்பூசியை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். பல இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இதனை பயன்படுத்தி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Categories

Tech |