Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆபத்தான சாலை – வாகன ஓட்டிகள் அச்சம்

தூத்துக்குடி அருகே ஆபத்தான சாலையில் உயிர் பயத்துடன் பயணிப்பதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடத்தில் இருந்து வாகன ஓட்டிகள் செல்லும் சாலையில் புதியதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தட்டார்மடம் கடைவிதியிலிருந்து நடுவக்குறிச்சி வரை உள்ள சாலை தோண்டப்பட்ட நிலையில் சாலை அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது.

இதனால் அந்த பகுதியில் வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஆபத்தான நிலையில் பயணம் செய்வதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்தனர். இந்த சாலையை விரைந்து சரி செய்ய வேண்டுமென்று வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |