உலக அதிசயங்களில் மச்சு பிச்சு ஒன்று. இந்த மச்சு பிச்சு 500 ஆண்டுகள் பழமையான கற்களால் ஆன ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இந்த மச்சு பிச்சு ஆண்டிஸ் மலை தொடரின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த மச்சு பிச்சு நகரத்திற்கு அருகில் கடுமையான காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு தீயானது கடந்து செவ்வாய்க்கிழமை அன்று விவசாயிகள் சில தேவையற்ற பொருட்களை எரித்தப் போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த காட்டுத்தீயினால் 49 ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில் இந்த காட்டு தீ மச்சு பிச்சு நகர த்தை நோக்கி வேகமாக பரவி வருகிறது.
இந்த தீயை அணைக்கும் பணியில் பெரு நாட்டினை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் கூறியது, நாங்கள் கடந்த இரண்டு நாட்களாக இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம. இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மேலும் சில இடங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைப்பது பெரும் சவாலாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.