சாய்ந்து விழும் நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை சாலே ஜமால் உசேன் நகர் 2-வது தெருவில் இருக்கும் மின் கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் பலத்த காற்று வீசினால் மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் இருக்கிறது. எனவே உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்னரே அதிகாரிகள் ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பத்தை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.