Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபத்தான முறையில் ஆட்களை ஏற்றி வந்த சரக்கு வேன்”…. போலீசார் அதிரடி….!!!!!

ஆபத்தான முறையில் பயணம் செய்த 15 பேர் இருந்த சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கே.வி.குப்பத்தை அடுத்திருக்கும் பில்லாந்திபட்டு பேருந்து நிறுத்தம் அருகே குடியாத்தம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது குடியாத்தத்தில் இருந்து செதுவாலை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டார்கள்.

அந்த வேனில் ஆபத்தான முறையில் 15 பேர் பயணம் மேற்கொண்டது தெரிய வந்தது. மேலும் டிரைவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து வேனை பரிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது..

Categories

Tech |