Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆபத்தான முறையில் தொங்கும் வயர்கள்…. பசுமாடு உயிரிழப்பு…. பொதுமக்களின் கோரிக்கை…!!

மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் கோல்டன் காலனி 4-வது தெருவில் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. இந்நிலையில் டிரான்ஸ்பார்மர் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.

இங்கு இருக்கும் மின்சார பெட்டியில் ஆபத்தான முறையில் வயர்கள் தொங்கியபடி இருக்கிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மின்வாரிய ஊழியர்கள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Categories

Tech |