தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்ததால் பல்வேறு அணைகள் நிரம்பி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை குறைந்தாலும் வெள்ள நீர் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில் மது பிரியர்கள் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அவை என்னவென்றால் திருவள்ளூர் அருகே கனமழை பெய்ததால் அங்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
அதைத்தாண்டி ஆபத்தான முறையில் மதுபான கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால், அந்தப் பகுதியில் சாலை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மது பிரியர் ஒருவர் பேசுகையில், இந்தப் பகுதியில் உள்ள சாலை வசதியை சீர் செய்யவில்லை என்றும், மழை வெள்ள நீரை கடந்து சென்று ஆபத்தான முறையில் மதுபாட்டில்கள் வாங்கி வருவதாகவும், அவர் குற்றம் சாட்டினார். எனவே அந்தப் பகுதியில் சாலை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.