Categories
இந்தியா தேசிய செய்திகள்

“ஆபத்தில் இந்தியா?”…. சமூக பரவலானது ‘ஒமிக்ரான்’…. ஆய்வில் வெளிவந்த ஷாக் நியூஸ்….!!!!

மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இன்சகாக் ( INSACOG ) அமைப்பு இந்தியாவில் “ஒமிக்ரான்” வைரஸ் சமூக பரவலாக மாறியுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வகை வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை முதல் ஒமிக்ரான் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி தான் கண்டறியப்பட்டது. இதனால் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இன்சகாக் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஒமிக்ரான் பாதிப்பு இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஒமிக்ரானிலிருந்து மாறுபாடு அடைந்த புதிய வகை BA.2 என்ற வைரஸ் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. எனவே இந்த வைரஸ் குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒமிக்ரான் தொற்று அபாயம் இந்தியாவில் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருவதாக இன்சகாக் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு ஜனவரி 3-ஆம் தேதிக்கு பிறகு சமூக பரவலாக மாறி இருப்பதாகவும், மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இந்த வைரஸ் வேகமாக பரவி ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளது. இருப்பினும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே அறிகுறி இல்லாமல் தென்படுவதாக இன்சகாக் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு ஐசியூவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. எனவே வேக்சின்களை முறையாக செலுத்தி கொள்வது, கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுவது ஆகியவை மட்டுமே உருமாற்றம் அடையும் கொரோனா வகை வைரஸ்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |