கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் டெல்லியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
உத்தரபிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த தொழிலாளர்கள் டெல்லியில் பல்வேறு பகுதிகளிலிருந்து நடந்தே ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் திரண்டனர். சொந்த ஊர் செல்வதற்காக ஊரடங்கு உத்தரவை மீறி யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் உணவு உள்ளிட்ட வசதிகளை அரசு ஏற்பாடு செய்து தரும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் பேருந்து நிலையத்தில் திரண்டனர். அவர்களுக்காக நூறு பேருந்துகளை டெல்லி போக்குவரத்து துறை ஏற்பாடு செய்திருந்தது.