ஐரோப்பிய நாடுகளில் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட இரண்டு மருத்துவ பணியாளர்களுக்கு ரத்தம் உறைதல் மற்றும் பெருமூளையில் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இதனால் டென்மார்க் அரசு கடந்த மார்ச் 11 ஆம் தேதி முதல் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக கூறி அதனை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய மருந்து நிறுவனம் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானது மற்றும் அதிக அளவில் நன்மைகள் இருக்கின்றது என்று கூறியுள்ளது. இதனால் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கி தற்போது அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட இருவருக்கு மீண்டும் ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.