கரும்பை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிப்பதனால் என்ன நடக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி கரும்பு சீசன் ஆரம்பித்துவிடும். இந்த கரும்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சுவைத்து உண்பார்கள். ஆனால் கரும்பு தின்ற உடனே தண்ணீர் குடிப்பார்கள் அவ்வாறு குடிப்பது தவறு. இவ்வாறு தண்ணீர் குடிப்பதன் காரணமாக நாக்கில் நமைச்சல் எடுக்கும், சிறு கொப்பளங்கள் தோன்றும்.
கரும்பு சாப்பிட்டு 15 நிமிடங்கள் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் கரும்பில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருக்கிறது. இந்த சுண்ணாம்பும், எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது. அந்த சமயம் நாம் தண்ணீரை குடிக்கும் போது அதிகமான சூட்டை கிளப்பி எதிர்வினை நடக்கிறது. இதனால் நம் நாக்கு வெந்து என்று விடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.