திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வானியல் ஆராய்ச்சி மையம் ஒன்று உள்ளது. இங்கு தொடர்ந்து சூரியனின் நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சூரியனில் தோன்றிவரும் கரும்புள்ளிகள் குறித்து வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், “தமிழகத்தில் சூரிய காந்தப் புயல் கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டும் 8 முறை சூரிய காந்தப்புயல் ஏற்பட்டுள்ளது. இது மிதமான முறையில் இருந்தது. இனிவரும் நாட்களில் சூரிய காந்தப் புயல் தன்மை வலுவடைய கூடும். இதனால் செயற்கைக்கோள், ஜி.பி.எஸ். விண்கலம் போன்றவை பாதிக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளனர்.