Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரை துரத்தி சென்ற காட்டு யானையால் பரபரப்பு….!!

காட்டு யானை வனத்துறையினரை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பலாப்பழங்களை சாப்பிடுவதற்காக ஏராளமான யானைகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் முள்ளூர் கிராமத்தில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை சாலையில் நடந்து சென்றுள்ளது.

அப்போது வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் வாகனங்களை நிறுத்தி யானைகளுடன் செல்பி எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் மழவன் சேரம்பாடியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது யானை வனத்துறையினரை நோக்கி துரத்தி ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிது நேரத்தில் யானை வனப்பகுதிக்குள் சென்றது.

Categories

Tech |