Categories
மாநில செய்திகள்

“ஆபரேஷன் கந்துவட்டி”… காவல்துறை அதிகாரிகளுக்கு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு..!!

கந்துவட்டி கொடுமை தொடர்பாக வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கந்து வட்டி கொடுமை காரணமாக புவனகிரி அருகே போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. இது சம்பந்தமாக பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. இந்த நிலையில் கந்துவட்டி தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ளார்.. அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அது அனுப்பப்பட்டுள்ளது.. “ஆபரேஷன் கந்து வட்டி” என்ற பெயரில் ஒரு சிறப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.. காவல் ஆணையர்கள் மற்றும்  எஸ்பிக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், கந்துவட்டி தொடர்பாக காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது உடனே  நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபரேஷன் கந்துவட்டி நடவடிக்கை மூலம் சட்ட அறிவுரை பெற்று வழக்குகளை பதிய வேண்டும். கையெழுத்து பெற்ற காகிதங்கள், சட்டவிரோதமான ஆவணங்கள் தொகை குறிப்பிடப்படாத காசோலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்..

Categories

Tech |