Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபரேஷன் கோவை” 1 டன் குட்கா பறிமுதல்…. அதிரடியில் போலீசார்…!!!!

கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம்பாளையம் ராயர் கோவில் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பெண் ஒருவரிடம் இருந்து 50 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதை தடுப்பதற்காக காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயண உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை திடீரென கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் மர்ம நபர்கள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை உக்கடம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் சோதனை நடத்தியதில் ஒரு டன் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் ஆஷிக், மொய்தீன், தேவேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |