இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்தி நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் சர்வதேச இணையதள குற்றவாளிகளின் அதாவது சைபர் கிரைம் கட்டமைப்பை தகர்த்தெறிய ஆபரேஷன் சக்ரா என்ற அதிரடி வேட்டையை சிபிஐ நடத்தி வருகின்றது .நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 115 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
அதில் இணையதள குற்றவாளிகள் 26 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் 16 பேரை கர்நாடக போலீசும், ஏழு பேரை டெல்லி போலீசும், இரண்டு பேரை பஞ்சாப் போலீசும்,ஒருவரை அந்தமான் போலீசும் கைது செய்துள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.