தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் சிக்கியுள்ளனர்.
காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் அடிப்படையில் தமிழக முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் “ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” என்ற தலைப்பில் தேடுதல் வேட்டையானது தொடர்ந்து நடத்தப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 133 பேர் பிடிபட்டுள்ளனர். இதில் மேலும் குறிப்பாக 15 பைரை நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர். இந்த 133 பேரில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர், பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடிகள் 13 பேரும் சிக்கினர்.
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த மின்னல் வேட்டையில் முக்கிய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. மேலும் தொடர்ந்து இந்த மின்னல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தலைமை இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..