தமிழ்நாடு முழுவதும் இதுவரை “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” நடவடிக்கையின் கீழ் கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கிக் கணக்குகளில் உள்ள சுமார் ₹50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 460 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, 1,006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில் ஆபரேஷன் மின்னலால் வெளிமாநிலங்களுக்கு ஓடிப்போன ரவுடிகள். கொள்ளையர்கள் 24 மணி நேரத்தில் எப்படி வந்தார்கள் என்று இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஆபரேஷன் மின்னலின் கீழ் கைதான 2,390 பேரை சுதந்திரமாக நடமாடவிட்டதன் மர்மம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார். ஆபரேஷன் மின்னல் நடவடிக்கையின் போதே வடக்கு மண்டல ஐஜியின் வீட்டில் கொள்ளை நடந்துள்ளதாக கூறிய இபிஎஸ், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.