காசி மீது 400 பக்க குற்றப்பத்திரிகை குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ளனர்.
நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி. இவர் பல பெண்களை ஏமாற்றி தனது காதல் வலையில் விழ வைத்து ஆபாசமாக படம் எடுத்ததுதான் அவர்களிடம் பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய நாகர்கோவில் காசி மீது 400 பக்க குற்றப்பத்திரிகை குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்களை காசி எவ்வாறெல்லாம் ஏமாற்றினார் என்றும், காசி மற்றும் அவரது நண்பர்கள் பெண்களை ஈவு இரக்கமின்றி சீரழித்து ரசித்து வீடியோ எடுத்தனர் எனவும் கூறியுள்ளனர்.