இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 21 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து 18 வயது சிறுவன் பதிவிறக்கம் செய்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கை தொடங்கி, இளம்பெண்ணின் சித்தரிக்கப்பட்ட ஆபாச புகைப்படத்தை சிறுவன் அதன் புரொபைலாக வைத்துள்ளார். மேலும் இளம் பெண் குறித்து ஆபாசமான வரிகளுடன் குறிப்பிட்டு, அவரை தொடர்பு கொள்ளுங்கள் என சிறுவன் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அறிந்ததும் அந்த இளம்பெண் சிறுவனிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது உனது புகைப்படங்களை ஆபாச வீடியோ குழுக்களில் வெளியிடுவேன் என சிறுவன் மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.